கொசுக்கள் உங்கள் மண்டையை வட்டமடிக்க காரணம் என்ன?

உங்கள் தலைக்கு மேல் கொசுக்கள் வட்டம் போடுவதாக உங்கள் நண்பர்கள்  கூறக் கேட்டு இருக்கலாம் அல்லது அதன் சத்தத்தால் தலைக்கு மேல் கொசுக்கள் உலாவுவதை  நீங்கலாகவே உணர்ந்து இருப்பீர்கள். அதன்பின் என்ன அறிவியல் இருக்கிறது. வாங்க பார்ப்போம்!

   நம்மை கொசுக்கள் முற்றுகையிட முக்கிய காரணங்கள் வியர்வை,கரியமில வாயு(CO2).

   நீங்கள் கடுமையான உடற்பயிற்சி அல்லது வேலை செய்துவிட்டு வந்தால் உங்கள் உடலில் வியர்வை வெளியேறும். அந்த வியர்வையில் உள்ள "ohsnow"என்னும் ரசாயனப் பொருள் (chemical substance) கொசுக்களை ஈர்க்கும் சக்தியைக் கொண்டது. எனவே வியர்வை துர்நாற்றம் உங்கள் மீது வீசினால் கொசுவிடம் இருந்து தப்பித்து விட ஒரு குளியலைப் போட்டுடுங்க நண்பா!😀

   இருப்பினும் உடலில் தலைப் பகுதியை மட்டும் ஏன் கொசுக்கள் வட்டமிடுகிறது. ஏனென்றால், நம் உடலில் அதிகம் வெப்பம் வெளியேறும் இடம் கழுத்திற்கு மேல் உள்ள தலைப்பகுதி தான். வெப்பத்தின் காரணமாக தலைப் பகுதியில் வியர்வை அதிகம் வெளியேறுகிறது.எனவே, கொசுக்கள் தலையைச் சுற்றி முற்றுகையிடுகிறது. மேலும் கரியமிலவாயு (CO2) கொசுவினால் தேடப் படுவது. இந்த கரியமில வாயுவும்(CO2)தலைப் பகுதியில் இருந்தே அதிகம் வெளியேறுகிறது. இதுவும் தலைக்கு மேல் கொசுக்கள் முற்றுகையிட ஒரு காரணம்.

  நண்பர்கள் கூட்டத்தில் உங்கள் தலையை மட்டும் சுற்றுகிறதா கொசு?அப்படியானால் தலையில் நீங்கள் எண்ணெயை வைத்திருப்பீர்கள். எண்ணெய் வைப்பதனால் வெப்பம் அதிகரிக்கும் அதனால் வேர்வை அதிகரிக்கும் எனவே, கொசுக்கள் முற்றுகையிடும். அதற்காக எண்ணெய் தேய்க்காமல் விட்டுவிடாதீர்கள்.😂

முக்கிய தகவல்:

  👉 பிரசவமாக இருக்கும் பெண்கள் 21% அதிகம் கரியமில வாயுவை வெளியேற்றுவதால் அவர்களை கொசு அதிகம் முற்றுகையிட கூடும்.

   👉O+ve,O-ve ரத்தம் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் விரும்புகிறது. இந்த ரத்தவகை உள்ளவர்கள் ஜாக்கிரதை. 😂

  👉 பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களை கடிக்கும். ஆண் கொசுக்கள் கடிக்காது. ஏனெனில் பெண் கொசுக்களுக்கு முட்டையிட அதிக புரதச்சத்து (proteins) தேவைப்படுகிறது.அதனை மனித ரத்தத்தின் வாயிலாக பெண் கொசுக்கள் எடுத்துக்கொள்கிறது.

  👉 ஆண் கொசுக்கள் தனக்கு தேவையான சத்தை பழங்கள், காய்கறிகள் இருந்து எடுத்துக்கொள்கிறது.


Post a Comment

1 Comments