"பிரச்சனை" என்றால் என்ன? இதற்கான விளக்கத்தை ஒரு தனி மனிதனால் பொதுவாகக் கூறிவிட முடியாது. ஏனெனில், ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் பிரச்சனை என்பது பல பரிமாணத்தை கொண்டதாக இருக்கிறது. சிலருக்கு பணப்பிரச்சனை சிலருக்கு உறவுகளில் பிரச்சனை இன்னும் சிலருக்கு தன் உள்ளார்ந்த மனப்பிரச்சனை. இதுபோல பலருக்குப் பல வகை பிரச்சினைகள்.

    சிலர் கூறுவதுண்டு"பணம் இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை"என்கிற வசனத்தை. அவர்களிடம் நான் ஒரு செய்தியை கூற விரும்புகிறேன்.சுஷாந்த் சிங் ராஜ்புட் என்கிற ஒரு ஹிந்தி நடிகர் ஏதோ ஒரு பிரச்சனையினால் தற்கொலை செய்து கொண்டார். என்ன பிரச்சனை என்று தெரியாதப்பா! விசாரணை சென்று கொண்டிருக்கிறது. அவரிடம் இல்லாத பணமா அல்லது புகழா இருப்பினும் ஏதோ ஒரு பிரச்சனை அவரை தற்கொலைக்குத் தூண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

      ஆக "பிரச்சனை இல்லா வாழ்க்கை" என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? வாருங்கள் இக் கட்டுரையை படித்துவிட்டு நீங்களே முடிவெடுங்கள்.



      ஒரு மனிதனின் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே ஆரம்பிப்போம். ஒருவன்  பிறந்த குழந்தையாய் இருக்கும் பொழுது ஒரே பெரும் பிரச்சனை பசி. அதற்கு அழுகை எனும் ஆயுதத்தை பயன்படுத்தி தன் பிரச்சனையை தாயிடம் தெரிவித்து அக்குழந்தை தன் பசி என்னும் பிரச்சனையை தீர்த்துக் கொள்கிறது. அந்தப் பிரச்சனையை (பசி) தீர்த்தவுடன் அக்குழந்தைக்கு நிம்மதி, அமைதி, ஆழ்ந்த உறக்கம் ஆகியன கிடைக்கிறது. நம் குழந்தைப் பருவத்தில் நம் பிரச்சனை தானாக தீரவில்லை. நம் குழந்தைத்தனமான சாமர்த்தியத்தால் பிரச்சனையைத் தீர்த்து நிம்மதியை பெற்றோம். எனவே நாம் தோன்றியபோதே நம்முடன் பிரச்சனையும் தோன்றியிருப்பதை காண்பீர்!

     ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்த்தவுடன் நமக்குள் கிடைக்கும் ஒரு உச்சகட்ட ஆனந்தமும் நிம்மதியும் இருக்கு பாருங்க! நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் சற்று எண்ணிப் பாருங்கள். அந்த உச்சகட்ட நிம்மதி எந்தவொரு பிரச்சனையும் இல்லாதவர் வாழ்க்கையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா?



     இதன் மூலம் ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது.அந்த இறைவன் ஓர் பெரும் பிரச்சனையை நமக்கு கொடுத்து இந்தப் பிரச்சினையை தீர்த்துவிட்டு உனது பரிசான உற்சாகத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொள் என்கிறார். பிரச்சனைகள் மூலம் நமது வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் ஒரு பிடிப்புடனும் வாழ வைக்கிறார் இறைவன்.

 அப்படியானால் பெரும் நிம்மதியான கடவுளை அடைவதற்கு நாம் எவ்வளவு பிரச்சனைகளை கடந்தாக வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்.

   பிரச்சனை இல்லா வாழ்க்கை இருக்கா? இல்லையா? சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது.

    அதிகம் சிந்திக்காதீர்கள் அப்படி ஒன்று இல்லை.😁😁