கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருந்தாலும் 1600 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிக்சர் அடிப்பது சாத்தியமே என்று நிகழ்த்தி நம்மை வியக்க வைத்துள்ளார் ஒரு நபர். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இப்படி ஒரு சிக்சர் நாம் அடிக்கப் போகிறோம் என்று அவருக்கே தெரியாது. கிரிக்கெட் வரலாற்றையே உலுக்கிய ஒரு சம்பவம் அது. இதனை கேட்டவுடன் நம் அனைவரின் மனதிலும் சில கேள்விகள் எழும்.

  • அவர் மனிதரா இல்லை வேற்று கிரகவாசியா
  • சிக்சர் தூரத்தை அளக்கும் கருவியில் ஏதேனும் கோளாறா?
  • அவரது மட்டை (Bat) ஏதேனும் வினோத பொருள்களால்(ஸ்பிரிங், இரும்பு முதலியன.) தயாரிக்கப்பட்டதா?
  • இல்லை அவருக்குத்தான் ஏதாவது வினோத சக்திகள் கிடைத்துவிட்டதா?

அத்தனை கேள்விகளுக்கும் தீர்வினை காணலாம் வாருங்கள்.

மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டானது இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் பிரபலம் அடையாத காலகட்டம் அது. 1899 ஏப்ரல் மாதம் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடந்தது. தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஆட்டம் நடந்து கொண்டிருக்கையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர் ஒருவர் பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தார்.

பொதுவாக சிக்ஸர் அடிக்கும் போது ரசிகர்களிடையே பந்து கிடைத்தால் அதனை மைதானத்தை நோக்கி எறிவார்கள். அதே பந்தை வைத்தே மீண்டும் விளையாட தொடங்குவார்கள்.

ஆனால் இவர் அடித்த பந்தானது மைதானத்தை கடந்து ஆயிரத்து அறுநூறு (1600) கிலோ மீட்டருக்கு அப்பால் போய் விழுந்தது.

பந்தானது 1600 கிலோ மீட்டர் கடந்தது என்று சொல்வதற்கு பதிலாக 1600 கிலோ மீட்டர் பயணித்தது என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தெரிந்துவிட்டதா?  ஆம். நீங்கள் கணித்தது சரிதான்.

 தென்னாப்பிரிக்கா நாட்டிலுள்ள ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரத்தில் அமைந்துள்ள பழைய வாண்டெரர்ஸ் மைதானத்தில் (Old Wanderers Stadium) தான் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இவர் அடித்த பந்தானது மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலில் போய் விழுந்தது.

ரயிலானது ஆயிரத்து அறுநூறு (1600) கிலோ மீட்டர் தூரம் பயணித்து கேப் டவுண்(Cape Town) நகரின் கிழக்கே போர்ட் எலிசபெத்(Port Elizabeth) என்ற இடத்தைச் சென்றடைந்தது. இரயிலில் இருந்த பந்து கண்டுபிடிக்கப்பட்டதால் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது நமக்குத் தெரிய வருகிறது.

இந்தச் சம்பவத்தில் 1,600 கிலோ மீட்டர் சிக்ஸர் அடித்த அந்த நபர் தென் ஆப்பிரிக்காவைச்சேர்ந்த  ஜிம்மி சின்கிளர்(Jimmy Sinclair).

Credits:Wikipedia

ஒரே ஆட்டத்தில்  சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரரும் இவரே.

இந்த நிகழ்வு குறித்து ICC ன் பதிவு