நாம் பார்க்கப்போவது இரண்டு வருடங்களுக்கு முன்பு இணைய உலகில் பிரபலமடைந்து, இப்பொழுது அனைவராலும் மறக்கப்பட்ட ஒரு நபரை பற்றித்தான்.
இவர் குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் திருட்டுத் தொழில் செய்பவர். இவர் பிரபலமடைய காரணம், ஒரு முறை தான் திருடச்சென்ற இடத்தில் தனது திறமையை காட்டியுள்ளார்.
அப்படி என்ன திறமை வாருங்கள் அந்நிகழ்வைப் பற்றி பார்க்கலாம்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நிகழ்ந்த சம்பவம் அது. அந்த நகரிலுள்ள ஒரு குடியிருப்பில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை ஒரு திருட்டுக் கும்பல் வெற்றிகரமாக திருடி முடித்தது.
அவர்களின் இலக்கு நகைகள், பணம், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் தானே தவிர அக்கூட்டத்தில் ஒருவரின் பார்வையும் சிசிடிவி கேமரா வின் மீது இல்லை.
ஆனால் சிசிடிவி கேமராவோ தனது கடமையை கச்சிதமாகச் செய்து முடித்தது.
பணம் கையில் இருக்கும் போது மனிதனின் மூளை சரியாக செயல்படாது என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணமாகிறது.
அதாவது திருட வரும்போது மிகத் தெளிவாக திட்டமிட்டு திருடர்கள் அனைவரும் சிசிடிவியில் முகம் பதிவாகாமல் இருக்க தலை குனிந்தபடியே நடந்து வந்துள்ளனர்.
ஆனால் திருடி முடித்துவிட்டு திரும்பும்போது கும்பலில் ஒருவர் மட்டும் முகத்தை மறைக்க மறந்து போனார்.
திருடும் போது யாரேனும் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் மறந்திருப்பாரோ! என்னமோ?
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் அங்கு கேமரா இருப்பதை உணர்ந்த திருடன் சட்டென்று தனது லுங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டார்.
அந்த நேரம் என்ன யோசித்தாரோ தெரியவில்லை முகத்தை மறைத்ததும் சிசிடிவி கேமராவிற்கு முன் ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு சென்றார்.
(அவரின் குத்தாட்ட வீடியோ இதோ👇)
இவர் குத்தாட்டம் போட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் வைரலாக பகிரப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வருடங்கள் ஆனாலும், இணைய உலகில் மங்காப் புகழுடன்
இன்றளவும் வலம் வரும் வீடியோக்களின் வரிசையில்
இதுவும் ஒன்று.
0 Comments