கதை மாந்தர்கள்: விக்ரம்

                              வேதா 

   வேலு அண்ணன்–ஆடை இஸ்திரி செய்பவர்.

     விக்ரம்,வேதா  இருவரும் தோழர்கள். இருவரும் ஒரே ஆபீஸில் 10,000 ரூபாய்க்கு வேலை செய்கிறார்கள். இருவரும் தங்கள் ஆடையை(சட்டை,பேண்ட்)சுருக்கமின்றி இஸ்திரி செய்து அணிவது வழக்கம். இதனை மாதம் 200 ரூபாய் ஊதியத்துடன் அருகிலுள்ள இஸ்திரி தொழிலாளி வேலு அண்ணன் செய்துவந்தார்.

  ஒருநாள் இது குறித்த உரையாடலில் விக்ரமும் வேதாவும்👇👇


விக்ரம் : நம்ம புதுசா ஒரு இஸ்திரி பெட்டி வாங்கிடலாம் வேதா?


வேதா : ஏன்? அதான் வேலு அண்ணே இருக்காரு இல்ல.


விக்ரம் : மாதம் 200 ரூபாய் செலவாகுது!


வேதா : சரி.


விக்ரம் : ஆளுக்கு பாதி காசு போட்டு ஒரு இஸ்திரி பெட்டி வாங்கிட்டா வருடம் 2000 ரூபாய்க்குமேல் செலவை சேமிக்கலாம். என்ன சொல்ற

வாங்கிக்கலாமா?


வேதா : இல்ல விக்ரம்.வேணாம்


விக்ரம் :  நான் வாங்க தான் போறேன்.


உரையாடல் முடிவுற்றது.


இந்த உரையாடலால் இருவருக்கும் ஏற்பட்ட சிந்தனை 👇👇


விக்ரமின் சிந்தனை : இந்த இளமை காலத்தில் போதுமான நேரம் இருந்தும் நம்மால் நம் சட்டையை கூட இஸ்திரி செய்து கொள்ள முடியாதா? நம் சோம்பேறித்தனத்தால் மாதம் 200 ரூபாய் வீண் செலவாகிறது. பணத்தை சிக்கனமாய் செலவு செய்யணும். இஸ்திரி பெட்டி வாங்கினால் வருடம் 2000 ரூபாய் சேமிக்கலாம். அவசர காலத்தில் உதவும்.


வேதா சிந்தனை : வேலு அண்ணன் தன் மனைவியுடன் 60 வயசுலயும் இந்த இஸ்திரி தொழிலால் உழைத்து சாப்பிட ஓடிட்டு இருக்காங்க. நம்ம மூணு வேலை நல்லா சாப்பிடுறோம். சுமாரா வாழறோம். வேலு அண்ணன் குடும்பத்தோட வாழ்க்கை நம்மள மாதிரி ஆளுங்க கொடுக்குற வேலையை நம்பி தான் இருக்கு. நான் வேலை கொடுக்கிறத நிறுத்தக்கூடாது.அவங்களும் வாழட்டும் நிம்மதியா!


  நீங்கள் விக்ரமா வேதாவா?????