மரமனிதம்

Tree


'மனிதம்' என்றால் என்ன? அதாவது ஆங்கிலத்தில் "humanity" என்பர். மனிதம் என்பது  மனிதனின் நற்பண்புகள். மனித இயல்பு எனில் அவற்றுள் மனிதனின் தீய பண்பு, நற்பண்பு இவை இரண்டும் உள்ளடங்கும்

மனிதனின் தீய பண்புகள் என்பது கோபம், பொறாமை, சுயநலம் போன்றவை. நல்ல பண்புகள் என்பது அன்பு செய்தல்,கருணை,பிறருக்கு உதவுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது

மேற்கண்ட நற்பண்புகள் கொண்டு தீய பண்புகள் அகற்றி ஒரு மனிதர் வாழ்கிறார் எனில் அவர் "மனிதம்" போற்றி வாழ்கிறார் என்பர். ஆனால் இன்றைய உலகில் சிறு பிரச்சனை தொடங்கி பெரும் பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் காரணம் நாம் "மனிதம்" பின்பற்றுவதை எங்கோ தவறவிட்டதை நமக்கு உணர்த்துகிறது.

எல்லைப்பிரச்சனையில் தொடங்கி எதிர்வீட்டுக்காரர் பிரச்சனை வரை அனைத்திற்கும் நாம் மனிதம் மறந்தமையே காரணம் என்பதை நீங்களே அறிவீர் !

சிறிது நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களை கவனித்தால் அவற்றுள் தாவரம்,மரம் ஆகிய உயிரினங்கள் என்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஏனெனில் அவை ஞானிகள் போன்ற பொறுமை கொண்டதாகவும் கடவுள் போன்ற கருணை கொண்டதாகவும் அன்பு,பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றில் அனைத்து உயிரினத்தைக் காட்டிலும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்படுவதை உணர்கிறேன்.    

   புரியவில்லையா அல்லது நம்ப முடியவில்லையா? வாருங்கள் ஒரு மரத்தின் முழு வாழ்க்கை முறையை சுருக்கமாக பார்க்கலாம்.

     ஒரு மரத்தின் விதை ஏதோ ஒரு பறவை மூலமாக மண்ணில் விழுகிறது. பிறகு தண்ணீரின் மூலம் பல இடையூறுகளைக் கடந்து மரம் ஆகிறது. ஒரு மரமானது தான் தோன்ற காரணமாக இருந்த பூச்சி இனத்தையும் பறவை இனத்தையும் மறப்பதில்லை.

மேலும் சில சமயங்களில் மட்டும் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் மாந்தர்களையும் மறப்பதில்லை. நன்றியுடைய அந்த மரமானது தான் உயிர் வாழத் தேவையான இலைகள்,தண்டுகள் போன்றவைகள் போக அதன் பிழைப்பிற்கு அவசியமற்ற பழம், பூ,காய் போன்றவற்றையும் சேர்த்தே தயாரிக்கிறது.

squirrel

இந்தப் பூ,பழம்,காய் மேலும் தேவை போக மீதமுள்ளதமுள்ள நீர் ஆகியவை சுற்றியுள்ள ஏதோ ஒரு உயிரினத்திற்கும் வாழ்வாதாரம் என்பதை அது ஏற்கனவே அறிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இத்தாவர இனமானது பெரிதும் சுயநலமற்று உணவு,மழை,நிழல் மண்வளம்,நீர்வளம்,சுவாசக்காற்று மேலும் பலவற்றை இறுதிவரை கருணை கலந்த அன்போடு வழங்கிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் இறந்த பிறகும் ஏதோ ஒரு வகையில் பிற உயிரினத்திற்கு உதவுவதை மறப்பதில்லை.

காகிதம், மரப்பொருட்கள் ஆகியவை இறந்த மரங்களே. ஆனால் இம்மரங்களை நாம்தான் மறந்துவிட்டோம்.  மேற்கூறியதன் மூலம் மரம் செடி கொடிகள் இல்லையேல் இவ்வுலகில் உயிரினமே வாழ இயலாது என்பதை அறிந்திருக்க முடியும்

ஆனால் தான் இல்லையேல் இவ்வுலகில்லை என்பதை அறிந்தும் இம்மரங்கள் அளிக்கும் அன்பு, கருணை,பொறுமை போன்ற பண்புகள் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த அதீத சக்தி மனிதனுக்கு கிடைத்திருந்தால் அப்பப்பா அலப்பறை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

       ஒருவேளை இந்த அன்பு,கருணை,பொறுமை, பிற உயிருக்கு உதவுதல் போன்ற குணங்கள் அதிகம் உள்ள உயிரினத்தையே கடவுள் விரும்பியதால் அத்தகைய குணங்கள் அதிகமுடைய தாவர இனத்திற்கே அனைத்து வல்லமையும் கொடுத்து," நீ இல்லையேல் இவ்வுலகில்லை !"என்று அருள் செய்திருப்பாரோ?

ஆம் "மரமனிதம்என்பது மரத்தின் "மனிதம்". "மரமனிதம்உணர்ந்தாலே போதும் "மனிதம்நம்முள் தானாக விதைக்கப்படும்!

                                                                    நன்றி

Nature

 

Post a Comment

3 Comments

  1. Thank you AC for your valuable comment.

    ReplyDelete
  2. அருமையான, மறுக்க முடியாத உண்மை...மனிதம் தளிர முயற்சிப்போம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி.கண்டிப்பாக அனைவரும் முயற்சிப்போம்.

      Delete